You are here

‘ஒரே சோதனை முறை குறித்து சிங்கப்பூருடன் ஆலோசனை’

  • ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எல்லையில் ஒரே சோதனை முறையைக் கொண்டு வரும் சாத்தியம் குறித்து சிங்கப் பூருடன் மேலும் ஆலோசனை நடத்தப்படும் என்று மலேசிய உள் துறை அமைச்சர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். “இது, இரு நாடுகளுக்கும் உள்ள பாதுகாப்பு தொடர்பான விவகாரம். ஒரே சோதனை முறை குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சுடன் ஆலோசிக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

தாமான் தெனாங் ஜெயாவில் உள்ள யோங் பெங்குக்கும் செகா மட்டுக்கும் இடையே உள்ள விரைவுச் சாலையை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசி னார். ஜோகூர் மேம்பாலத்தில் நெரிசலைக் குறைப்பதற்காக ஒரே சுங்கச் சோதனை முறையை கொண்டு வரலாம் என்று பிரதமர் நஜிப் முன்னதாக வழங்கிய யோச னையை அவர் நினைவூட்டினார். ஆனால் சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பில் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் பயணிகளை சோத னையிடுவது முக்கிய அம்சம் என்பதால் அதிலிருந்து விலகு வதற்கான சாத்தியம் இல்லை என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சு கூறியிருந்தது.