You are here

4 கோல்களைப் புகுத்திய அகுவேரோ

  • படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டியும் லெஸ்டர் சிட்டி யும் மோதிய ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ் டர் சிட்டி அபார வெற்றிபெற்றது. ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் நான்கு கோல்களையும் புகுத்தி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் சிட்டியின் செர்ஜியொ அகுவேரோ. பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வேட்கையில் சிட்டி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் இந்த ஆட்டத்திற்குப் பிறகு 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. “இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு அகுவேரோ காரணம். பாராட்டுகள் அவருக்குதான் சேரவேண்டும்,” என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா கூறியுள்ளார்.

“அகுவேரோ சிறப்பாக விளை யாடினார். அணிக்கு அவர் மிகமுக்கியமான ஆட்டக்காரர்,” என் றும் கார்டியோலா மேலும் தெரி வித்துள்ளார். லெஸ்டர் சிட்டி அணியின் ரியாட் மஹ்ரெஸ் நீண்ட நாட்க ளுக்குப் பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் களமிறங்கினார். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்குச் செல்லவிருந்த மஹ்ரெஸ், அரங்கி னுள் வந்தவுடன் இரு அணிகளின் ரசிகர்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். முதல்பாதியில் 1-1 என்று சமநிலையில் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதற்குப் பின்னர் கெவின் டி பிரய்ன அடித்த பந்து இரு கோல்களை அகுவேரோ புகுத்த காரணமாக இருந்தது. ஆட்டம் தொடங்கிய உடன் மூன்றே நிமிடத்தில் சிட்டி யின் ஸ்டர்லிங் கோலைப் புகுத்தி னார். அந்த கோலுக்கு டி பிரய்ன ஏற்படுத்திய வாய்ப்பு இன்றியமையாதது.

மான்செஸ்டர் சிட்டியும் லெஸ்டர் சிட்டியும் மோதிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நான்கு கோல்களைப் புகுத்தியுள்ளார் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ. இந்தப் பருவத்தின் 21வது கோலைப் புகுத்தி ஸ்பர்ஸ் அணியின் ஹேரி கேனுக்கு அடுத்த நிலையில் உள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்