You are here

ரியால் மட்ரிட் அணிக்கு தன்னம்பிக்கை ஊட்டிய ஆட்டம்

  • படம்: ராய்ட்டர்ஸ்

பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் ரியால் மட்ரிட் அணியும் ரியால் சோசியடாட் அணியும் மோதிய ஆட்டத்தில் 5=2 கோல் கணக்கில் ரியால் மட்ரிட் அணி அபார வெற்றி பெற்றது. புதன்கிழமை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாரிஸ் செயிண்ட் ஜர்மைன் குழுவுடன் மோதவிருக்கும் ரியால் மட்ரிட் அணிக்கு இந்த வெற்றி பெரும் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. ஸ்பானிய லீக் பட்டியலில் தற்போது ரியால் மட்ரிட் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. வெலன்சியா அணி அதற்கு அடுத்த நிலையில் உள்ளது. முதலிடத்தில் உள்ள பார்சிலோனாவை விட 16 புள்ளிகள் குறைவாக எடுத்திருந்தாலும் இப்போது ரியால் மட்ரிட் தனது கவனத்தை சாம் பியன்ஸ் லீக் கிண்ணத்தைத் தக்கவைப் பதிலேயே உள்ளது.

ஸ்பானிய லீக் கிண்ணத்தைக் கைப்பற் றும் வாய்ப்பை ஏற்கெனவே நழுவவிட்ட ரியால் மட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத் தையாவது மீண்டும் கைப்பற்றுவதில் நிர்வாகி சிடேன் உறுதியாக உள்ளார்.

ரியால் மட்ரிட் அணியின் ஆட்டக்காரர் ரொனால்டோ மூன்று கோல்களைப் புகுத்தி அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். படம்: ராய்ட்டர்ஸ்