You are here

இந்தோனீசியாவில் பேருந்து விபத்து: 27 பேர் பலி

  • படம்: ராய்ட்டர்ஸ்

இந்தோனீசியாவின் ஜாவா தீவில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலைப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக சுமார் 40 பேர் ஒரு பேருந்தில் சென்றனர். சுற்றுலாப் பயணத்தை முடித்துக்கொண்டு அந்தப் பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதைத் தொடர்ந்து அந்தப் பேருந்து ஒரு மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகளில் 27 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலிசார் கூறினர். விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்