You are here

‘ரேக்ளா’ போட்டியில் பங்கேற்கும் கதிர்

  • கதிர், ஓவியா

‘ரேக்ளா’ வண்டி போட்டியை மையப் படுத்தி புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பட்டுக் கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கும் இப்படத்தின் கதாநாயகன் கதிர். ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பிறகு கதிருக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சைப் பகுதியில் தொடங்க இருக்கிறதாம்.

மேலும் கடம்பூர் மலைப்பகுதி, சென்னை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். “கதாநாயகனுக்கான தேடுதல் வேட்டையில் இருந்தபோது எங்களுக்குக் கிடைத்தவர் கதிர். அவர் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துவார். ‘ரேக்ளா’ வண்டி போட்டியை மையப் படுத்தியே இப்படம் உருவாகிறது. ‘பென்ஹர்’, ‘உழவன் மகன்’ படங்களின் வரிசையில் இப்படமும் பேசப்படும்,” என்கிறார் இயக்குநர்.