You are here

நிலத்தடி நீரை காட்டி காவிரி நீர் குறைப்பு

இந்தியாவில் கர்நாடகம், தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக நிலு வையில் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பில் நாட்டின் உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்து வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் விவசாயிகளும் பொதுமக்களும் ஏமாற்றம், கவலை, ஏக்கம், கோபம் உள்ளிட்ட பலவற்றையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சுதந்திரத்துக்கு முந்தைய ஒப்பந்தம், காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இப்போதைய தீர்ப்பு எல்லாமே தமிழகத்துக் கான காவிரி நீரின் அளவைக் குறைத்துக்கொண்டே வருவ தாகக் கூறி, தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேவேளையில், விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் கர்நாடாக முதல்வர் சித்த ராமையா உட்பட அந்த மாநிலத் தின் பல தரப்பினரும் தீர்ப்பை வரவேற்று இருக்கிறார்கள்.