You are here

வெளியானது ஸ்ரேயா படம்; அதிர்ச்சியில் படக்குழு

  • ஸ்ரேயா

மஞ்சு விஷ்ணு - ஸ்ரேயா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘காயத்ரி’ திரைப்படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையத்தளங்களிலும் வெளியாகியது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓர் இணையத்தளத்தில் 2 லட்சம் பேரும் இன்னொரு தளத்தில் 75,000 பேரும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து படத்தைத் தயாரித்துள்ள நடிகர் மோகன்பாபு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார். “நான் கஷ்டப்பட்டு காயத்ரி படத்தைத் தயாரித்தேன். கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 8 மாதங்கள் படத்துக்காக உழைத்தேன். ஆனால் படம் திரைக்கு வந்த அன்றே இணையத்தளத்தில் வெளியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. எந்தத் திரையரங்கில் படத்தைத் திருட்டுத்தனமாகப் பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.

“இந்தப் படத்தை நான் வியாபாரம் செய்துவிட்டேன். ஆனாலும் இணையத்தளத்தில் வெளியானதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.” என்று மோகன்பாபு கூறினார். அண்மைய காலமாகப் புத்தம் புதிய தமிழ்ப் படங்களும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக் கும்போது இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது ஒட்டுமொத்த திரையுலகைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் திரையுலகினர் திண்டாடுகின்றனர்.