You are here

2020லிருந்து மின்னிலக்கச் சேவைகளுக்குப் பொருள் சேவை வரி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னிலக் கச் சேவைகளுக்கு 2020ஆம் ஆண்டிலிருந்து பொருள், சேவை வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். இன்றைய மின்னிலக்கப் பொருளியலில் சிங்கப்பூரின் வரி வசூலிக்கும் முறையை நியாயமானதாகவும் மீள்திறன் மிக்கதாகவும் அமைக்க இந்த வரியை அறிமுகம் செய்வ தாக திரு ஹெங் கூறினார். இறக்குமதி செய்யப்படும் சேவைகளும் உள்ளூர் சேவை களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதை இந்த மாற்றம் உறுதி செய்யும் என்றார் அமைச்சர்.

புதிய வரி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை சந்தைப்படுத்தும் சேவைகள், கணக்கியல் சேவைகள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ‘வர்த்தகத்துக்கு வர்த்தகம்’ என்ற பிரிவாகவும் காணொளி மற்றும் இசை ஒளிபரப்புச் சேவை, செயலிகள் மற்றும் இணையச் சந்தா கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய ‘வர்த்தகத்துக்கு வாடிக்கை யாளர்’ என்ற பிரிவாகவும் பிரிக்கப்படும். சிங்கப்பூரில் பதிவு செய்யாமல் சேவை வழங்கும் வெளி நாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவைகளை இறக்குமதி செய்யும் வாடிக்கையாளர்களும் வர்த்தகங்களும் பொருள் சேவை வரி செலுத்த வேண்டும்.