You are here

கூகல் செயலியில் புதிய மாற்றங்கள்

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் திறன்பேசி இயங்குதளத்தில் கூகல் சில மாதங்களாக புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வந்து உள்ளது. கூகல் செயலியின் வடிவமைப்பு களை மறுவடிவம் செய்துள்ளது. தற்பொழுது தனிநபர் ஃபீட்ஸ் (feeds) பக்கத்தில் புதிய மின் அஞ்சல், நாட்காட்டி, டைம் டிராவல் போன்றவற்றைத் தனித்தனியாக பார்ப்பது போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மக்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில் இவை அனைத்து ‘ஃபீட்ஸ்சும்’ ஒரே இடத்தில் அமைவது போல் இருந்தால் இன் னும் எளிதாக இருந்திருக்கும். இந்நிலையில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ள ‘எடிட் ஸ்கிரீன் ஷாட்’ வசதி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கூகல் செயலியில் அண்மை யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி மூலம் கூகலில் இருந்து கொண்டே படத்தை ‘எடிட்’ செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு புது செயிலிக்குள் சென்று புகைப்படங் களை ‘எடிட்’ செய்ய வேண்டியது இல்லை.

Google Settings=>Accounts &Privacy=>Edit and share screenshots என்ற மெனுவில் சென்று புகைப்படத்தை நமக்குப் பிடித்தது போல் வடிவமைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் கூகல் இணைய உலாவியில் புகைப்படங்களைத் தேடுதலில் தரப்பட்டிருந்த வசதி ஒன்றினைத் திடீரென நீக்கி உள்ளது. அதாவது ‘View Image’ எனும் வசதி ஊடாக குறித்த புகைப்படத்தினைப் புதிய உலாவி யில் திறக்க வைப்பதுடன் தர விறக்கம் செய்யும் வசதியும் தரப் பட்டிருந்தது.