You are here

மதுரையில் துவங்கியது ‘நாடோடிகள் 2’

சமுத்திரகனி, சசிகுமார் கூட்டணியில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் ‘நாடோடிகள்’. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சமுத்திரகனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மெட்ராஸ் என்டர்பிரைசிஸ்’ சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நேற்றுத் துவங்கியது. தொடர்ந்து 80 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வர எண்ணியுள்ளனர். ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ சார்பில் இந்தாண்டு ‘96’, ‘நாடோடிகள் 2’ மற்றும் இன்னுமொரு பெரிய நடிகரின் படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.