You are here

கவிமாலையின் 7ஆம் ஆண்டு கவிதைப் பயிலரங்கு

  • படம்: கவிமாலை

கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு 2012ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கை நடத்தி வருகிறது. தேசிய நூலகத்தில் சென்ற சனிக்கிழமை இந்த ஆண்டுக் கான கவிமாலையின் கவிதைப் பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கில் பல்வேறு பள்ளிகளிலும் இருந்து வந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கவிமாலையின் தலைவர் இறை.மதியழகனின் அறிமுக உரையுடன் பயிலரங்கம் தொடங்கியது. மாணவர்களுக்குப் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி, எளிமையான முறையில் எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கண வகைகளுக்கு எடுத்துக்காட்டு கள் கூறி, நகைச்சுவை கலந்து முனைவர் மன்னை க.இராஜ கோபாலன் அவர்கள் நடத்திய பயிலரங்கு பயிற்சிப் பட்டறையை மாணவர்கள் உற்சாகத்தோடும் ஈடுபாட்டோடும் கேட்டுப் பயிற்சி பெற்றனர்.

கவிமாலையின் மாணவர் கவிதைப் பயிலரங்கில், கவிதைப் பயிற்சியுடன் நடந்த கலந்துரையாடலில் மாணவி ஒருவர் முனைவர் மன்னை க.இராஜகோபாலனுடன் உரையாடுகிறார். படம்: கவிமாலை