You are here

சிங்கப்பூர் தோட்டத் திருவிழா ஜூலையில் மீண்டும் ஆரம்பம்

சிங்கப்பூர் தோட்டத் திருவிழா இரு புதிய கண்காட்சிகளுடன் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. கரையோரப் பூந்தோட்டத்தில் ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை ஏழாவது முறையாக இவ்விழா நடைபெற உள்ளது. நீ ஆன் சிட்டியில் அமைந்துள்ள தக்கா‌ஷிமாயா கடைத்தொகுதி யில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ சனிக் கிழமை அன்று இவ்விழாவைத் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வுடன் 150 தொண் டூழியர்களும் பங்காளிகளும் ஒன் றாக இணைந்து உலகின் மிகப் பெரிய மலர்க்கூடையைத் தயா ரித்து ஒரு புதிய உலக கின்னஸ் சாதனையைப் படைக்கும் நிகழ்ச்சி யும் ஒருங்கே நடைபெற்றது. 50 வகையான விதவிதமான தாவரங்களில் பூத்துக்குலுங்கிய 27,000 மலர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய இந்தப் பூக் கூடை உருவாகி இருந்தது. சிங்கப்பூர் தோட்டத் திருவிழா வில் இரு புதிய கண்காட்சிகளும் இடம்பெற உள்ளன. ஆர்க்கிட் கண்காட்சி ஏப்ரல் 21 முதல் 29ஆம் தேதி வரை தேசிய ஆர்க்கிட் தோட்டத்திலும் சிங்கப் பூர் பொட்டானிக் கார்டனிலும் இடம்பெறும். தோட்டக்கலை கண்காட்சி ஜூரோங் கேலரி கார்டனில் அடுத்த ஆண்டு 9 நாட்களுக்கு இடம்பெறும். 400,000க்கும் மேலான பார்வை யாளர்கள் வரை இந்த சிங்கப்பூர் தோட்டத் திருவிழாவுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.