You are here

சிறையில் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய கைதிகள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்ட சிறையி லிருக்கும் விசாரணைக்கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்ஃபி படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினர். இதுபற்றி தெரிவித்த போலிசார், இந்தக் கைதிகளிடம் இருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதலாகி இருப்பதாகவும் முழுமையான விசாரணை நடப்பதாகவும் தெரி வித்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடு பட்ட விசாரணைக்கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர். இந்நிலையில், குற்றம் சாட்டப் பட்டுள்ள மூன்று பேர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக சிறைக் கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார். உ.பி.யில் சில நாட்களுக்கு முன், வழக்கறிஞர் ஒருவர் சிறையிலிருக்கும் கைதியுடன் கைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதால் கைதாகியது குறிப்பிடத்தக்கது.