You are here

முன்னேற்றப் பாதையில் செல்சி

செல்சி: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் கடந்த பருவ வெற்றியாளரான செல்சி குழு, தற்போதைய பருவத்தில் நான்காவது இடத்தையாவது பிடிக் குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் நேற்று அதி காலை நடந்த ஆட்டத்தில் கிரிஸ் டல் பேலஸ் குழுவை வீழ்த்தியதால் செல்சி மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக ரசி கர்கள் கருதுகிறார்கள். ஐந்தாவது இடத்தில் உள்ள செல்சிக்கு இந்த வெற்றியால் பட்டி யலில் முன்னேற்றம் இல்லையென் றாலும் நான்காவது இடத்திலுள்ள டோட்டன்ஹம் குழுவுடனான புள் ளிகள் இடைவெளியை அக்குழு இரண்டாகக் குறைத்துள்ளது.

சொந்த அரங்கில் நடந்த ஆட் டத்தில் முதல் கோலைப் போட்டு செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் வில்லியன். பேலஸ் வீரர் மார்ட்டின் கெல்லி காலில் பட்டுத் திரும்பிய பந்தை வில்லியன் 25வது நிமிடத்தில் கோலாக மாற்றினார். செல்சி குழுவிற்கான அடுத்த கோல், பேலசின் சொந்த கோலாக அமைந்தது. பேலசின் மார்ட்டின் கெல்லி உதைத்த பந்து சொந்த வலைக்குள் சென்றதால், முற்பாதி ஆட்டத் திலேயே 2=0 என முன்னிலை பெற்றது செல்சி.

செல்சிக்கு எதிரான ஆட்டத்தின் போது கிரிஸ்டல் பேலஸ் குழுவின் அலெக்சாண்டர் ஷார்லத் வலைக்குள் உதைத்த பந்தை நடுவர்கள் கோலாக ஏற்றுக்கொள்ள வில்லை. படம்: ஏஎஃப்பி