You are here

‘அமெரிக்காவை மேலோங்கச் செய்வோம்’; அடுத்த அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் தயார்

பென்சில்வேனியா: 2020ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் அமரிக்க அதிபர் தேர்தலுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் இப்போதே தயாராகிவிட்டார். தமது தேர்தல் பிரசாரத்துக்கான ‘அமெரிக்காவை மேலோங்கச் செய்வோம்’ என்ற முழக்கத்தை அவர் நேற்று முன்தினம் அறிமுகப் படுத்தினார். பிட்ஸ்பர்க் புறநகர் பகுதியில் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் பேசினார்.

சிறப்பு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரை அதிபர் டிரம்ப் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். வேட்பாளரான ரிக் சக்கோனி மிகவும் நல்லவர் என்று புகழாரம் சூட்டினார் டிரம்ப். கிட்டத்தட்ட 75 நிமிடங் களுக்குப் பேசிய டிரம்ப், அண்மைய காலமாக தாம் ஆற்றி வந்திருக்கும் சாதனைகளைப் பட்டியலிட்டார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு நெருக்குதல் தருவது, பொருளி யலை மேம்படுத்துவதற்கு எடுத் துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவர் விவரித்தார்.

பிட்ஸ்பர்க்கில் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய அதிபர் டிரம்ப். படம்: ஏஎஃப்பி