You are here

அதிர்ஷ்டம் தேவை என்கிறார் கீர்த்தி

  •  கீர்த்தி.

“நான் எந்த இடத்தில் இருக்கிறேன், எவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்று கணக்குப் போடமாட்டேன். கிடைக்கும் வாய்ப்பு களை ஏற்று, அவற்றில் முழுக் கவனம் செலுத்தி, எனக்கான கதாபாத்திரங்களை நல்லபடியாக செய்யவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். “கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதிலும் அக்கறை காட்டுவது இல்லை. கிடைக்கும் கதாபாத்திரங்களில் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். எனினும் எனக்கு நல்ல கதாபாத்திரங்களே அமைகின்றன. “சில மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை ‘நடிகையர் திலகம்’ படம் நிறைவேற்றி இருக்கிறது. திரையுலக சகாப்தமாக வாழ்ந்த வர் சாவித்திரி. அவரது வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

‘நடிகையர் திலகம்’ படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். சாவித்திரியுடன் நெருக்கமாகப் பழகி யவர்கள், அவரது குடும்பத்தார் சிலரும் கூட கீர்த்திக்குப் பாராட்டுத் தெரிவித்துள் ளனராம். அதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார் கீர்த்தி. இதற்கிடையே விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்ப தாக தெரிவித்துள்ள அவர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாகச் சொல்கிறார். “விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு வெகு விரைவில் கிடைக்கும் என நிச்சயம் நான் எதிர்பார்க்க வில்லை. “எனினும் அதிர்ஷ் டம் இருப்பதால் இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்திருக்கிறது.

“தமிழில் எனக்கு திருப்திகரமான வேடங்கள் அமை கின்றன.

“அதற்காக இயக்குநர்க ளுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

“அதே சமயம் ரசிகர் களின் ஆதரவு இன்றி இந்த வளர்ச்சி சாத்திய மில்லை. ரசிகர்களே திரைக் கலைஞர்களின் இருப்பையும் இடத்தை யும் தீர்மானிக்கிறார்கள்.

“எனவே நமது திருப்தியைவிட ரசி கர்களின் திருப் தியே முக்கியம். அந்த வகையில் சாவித்திரியம்மா வேடத்தில் எனது நடிப்பு ரசிகர்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்.“இந்தப் படத் துக்காக அதி கம் உழைத்துள் ளேன். அந்த உழைப்பு நிச்சயம் வீண் போகாது,” என்கிறார் கீர்த்தி.