You are here

பீஷான் பணிமனைக்கு முதல் முறையாக வந்த அதிபர்

பீஷானில் உள்ள எஸ்எம்ஆர்டி பணிமனைக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப், அங்கு பணி யாற்றும் ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூரின் பொதுப் போக்கு வரத்து முறையை 24 மணி நேரமும் இடைவிடாமல் செயல் படுத்தும் 21,000 ஊழியர்களை அவர் பாராட்டினார். அதிபர் ஹலிமா வருகை யின்போது போக்குவரத்து அமைச் சர் கோ பூன் வானும் முக்கிய அரசு, தொழிற்சங்க அமைப்பு களான போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதி களும் உடன் இருந்தனர்.

காலை 10.00 மணிக்கு பணி மனைக்கு வந்த அதிபர், ரயில் பராமரிப்புப் பகுதிகளை பார்வை யிடுவதற்கு முன்பு எஸ்எம்ஆர்டி ஊழியர்களைச் சந்தித்து உரையா டினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஊழியர்களில் பலர் குழு, குழுவாக அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். திருவாட்டி ஹலிமா பின்னர் ஊழியர்களின் உணவு, சிற்றுண்டி நிலையத்தை பார்வையிட்டார்.

எஸ்எம்ஆர்டியின் பீஷான் பணிமனையில் ஊழியர்களைச் சந்தித்து உற்சாகமூட்டிய அதிபர் ஹலிமா யாக்கோப். உடன் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (வலம்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்