You are here

‘வா‌ஷிங்டன் மந்திரப் பந்துவீச்சு’

  • வா‌ஷிங்டன் சுந்தர். படம்: ஏஎஃப்பி

கொழும்பு: சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் வா‌ஷிங்டன் சுந்தரின் மந்திரப் பந்துவீச்சுக்குத் தலை வணங்குவதாக இந்திய கிரிக் கெட் அணியின் தற்காலிகத் தலைவர் ரோகித் சர்மா தெரி வித்துள்ளார். இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பங்ளாதேஷை 17 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 200க்கு மேல் ஓட்டங்களைக் குவித்தபோதும் அதை வெற்றிகரமாக விரட்டியது பங்ளாதேஷ் அணி. அதேபோன்று இம்முறையும் இலக்கை விரட்டி விடலாம் என்ற நம்பிக்கையில், பூவா தலையாவில் வென்ற பங்ளா தேஷ் அணித்தலைவர் மஹ்மு துல்லா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்தும் ‌ஷிகர் தவானும் களமிறங்கினர். முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி யின் பந்தடிப்பு விகிதம் மந்த மாகவே இருந்தது. அணியின் எண்ணிக்கை 70 ஆக இருந்த போது 35 ஓட்டங்களை எடுத் திருந்த தவான் ஆட்டமிழந்தார். அதன்பின், ரோகித்துடன் சுரேஷ் ரெய்னா இணைந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. ரோகித் 61 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 89 ஓட்டங்களை விளாசினார். ரெய்னா 30 பந்து களில் 47 ஓட்டங்களைக் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது.

பங்ளாதேஷ் அணியின் முதல் மூன்று பந்தடிப்பாளர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வா‌ஷிங்டன் சுந்தர். படம்: ஏஎஃப்பி