You are here

குளியல் தண்ணீரின் பயன்பாட்டை உணர்த்தும் சாதனம்

குளிக்கும்போது எவ்வளவு தண் ணீரைப் பயன்படுத்துகிறோம் என் பதை இனி குடியிருப்பாளர்களால் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு உதவும் வகையில் ‘ஸ்மார்ட் ஷவர்’ என்னும் சாதனம் பொருத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் அத் தகைய சாதனத்தைப் பெறவுள் ளன. ‘வெஸ்ட் ராக் அட் புக்கிட் பாத்தோக்’ குடியிருப்புப் பேட்டை யில் முதன்முதலாக அந்தத் தண் ணீர் கண்காணிப்புச் சாதனம் பொருத்தப்படும். 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 10,000க்கு மேற்பட்ட பிடிஓ வீடு களில் அந்த சாதனத்தைப் பொருத்த பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டமிடுகிறது.

குளியல் குழாயில் பொருத்தப் படும் அந்த சாதனம் மூலம், எவ் வளவு தண்ணீரைப் பயன்படுத்து கிறோம் என்பதைத் தெரிந்துகொள் வதோடு தண்ணீர் சிக்கன இலக்கை நிர்ணயிக்கவும் கைபேசி செயலியோடு இணைத்து முன்னர் பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளவும் முடியும். மேலும் தண்ணீர் பயன்பாட்டின் அளவை நிறங்களின் மூலமும் அச்சாதனம் உணர்த்தும். அதிக தண்ணீரைப் பயன்படுத்தும்போது அடர்த்தியான நிறம் வெளிப்படும். இந்த ‘ஸ்மார்ட் ஷவர்’ சாதனம் ஒவ்வொன்றும் சந்தை மதிப்பில் $150 விலையாகிறது. மொத்தமாக வாங்குவதால் கழகத்திற்கு அது மலிவு விலை யில் கிடைக்கும். இருந்தபோதிலும் இச்சாதனத்திற்குச் செலவிடும் தொகையை குடியிருப்பாளர்களி டம் வசூலிக்கப்போவதில்லை என கழகம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு தண்ணீர் செலவாகிறது என்பதைத் தெரிவிக்கும் சாதனம் இந்தக் குளியல் குழாயில் பொருத்தப் பட்டுள்ளது. தண்ணீர் சிக்கன இலக்கை வகுத்துக் கொள்ள இதன் கணக்கீடு உதவும். அத்துடன் இதுவரை பயன்படுத்திய தண்ணீரின் அளவை கைபேசிச் செயலியின் வழியாக தெரிந்துகொள்ள முடியும். படம்: திமத்தி டேவிட்