You are here

போதைப் பொருள் - ஒரு குடும்பத்தின் அழிவு, ஓரு நாட்டின் சீர்கேடு

அப்துல் கரீம், தலைமை இயக்குநர்,
சிங்கப்பூர் போதைப் பொருள் தடுப்புச் சங்கம்

போதைப் பொருள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும் என்றால் அது மிகையாகாது. ஒவ்வோர் ஆண்டும் உலகில் பல் லாயிரக்கணக்கான உயிர்கள் போதைப் பொருளுக்குப் பலியாகின்றன. போதைப் பொருள் ஒரு கொடிய நோய்க்குச் சமமானது. இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காணவேண்டும் என்றால் அரசாங்கம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுகூடி செயல்படவேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, புதிய போதைப் புழங்கிகளில் பெரும்பாலா னோர் 30 வயதுக்கு உட்பட்ட இளை யர்கள் என்று தெரியவந்துள்ளது. சேகர் (புனைப்பெயர்), ஒரு பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவன். தனது நண்பர்களிடம் சுறுசுறுப்பாகச் செயல்படவும் நன்றாகப் படிக்கவும் உதவும் ஒரு மாத்திரையை அவன் பகிர்ந்து கொள்கிறான். அது ‘K2’ எனும் பெயர் கொண்ட ஒரு போதைப் பொருள் என்று பின்னர் தான் தெரிய வருகிறது. இதில் சம்பந் தப்பட்ட அனைத்து மாணவர்களும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்படுகின் றனர்.

இந்த மாணவர்களில் சிலர் நன்கு படிக்கக்கூடியவர்கள். முதல் முறை தவறு செய்பவர்கள் என்றாலும் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவேண்டும். சேகர்போல இன்னும் பல மாணவர்கள் தங்கள் அறியாமையாலும் ஒருமுறை தவறு செய்யலாமே என்ற எண்ணத்தினா லும் தங்களின் எதிர்காலத்தைப் புறக்கணிக்கின்றனர்.

முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg