You are here

அஞ்சலியின் ‘பேய்’ ஆர்வம்

  • அஞ்சலி.

தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே விரும்பித் தேர்வு செய்து நடித்து வருவதாகக் கூறுகிறார் அஞ்சலி. அது மட்டுமல்ல, பேய்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் அம்மணிக்கு இருக்கிறதாம். தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக கோடம் பாக்கத்தை விட்டு சில காலம் விலகி நின்றிருந்தார் அஞ்சலி. தற்போது அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டுவிட்டதாகத் தகவல். இதனால் தெலுங்கில் இருந்து மீண்டும் தமிழ்த் திரையுலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளார்.

அண்மையில் இவர் நடித்து வெளியான ‘பலூன்’ படம் வசூல் ரீதியில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பேய்க் கதைகளில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார். “தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித் துள்ளேன். எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத் துவம் அளிக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். “அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் அமைகின்றன. ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர் களிடம் இருந்து பாராட்டுகளும் தேடி வருகின்றன. ‘பலூன்’ அடைந்த வெற்றியால் பேய்க் கதைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது,” என்கிறார் அஞ்சலி.