You are here

முதல் போராட்டம்: தினகரன் அறிவிப்பு

சென்னை: புதுக்கட்சி துவங்கிய கையோடு, முதல் போராட்டத்தை அறிவித்துள்ளார் டிடிவி தினக ரன். அவரது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ள தினகரன், வரும் 25ஆம் தேதி தஞ்சையில் போராட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத் திட உத்தரவிட்டும், மத்திய அரசு அதற்கான முழு முயற்சி எடுப்பதாக தெரியவில்லை. “தமிழகத்தில் உள்ள இபிஎஸ், ஓபிஎஸ் அரசு மாநிலத்தின் குரலை ஓங்கி ஒலிக்கவில்லை.

எனவே, மத்திய அரசுக்கு அழுத் தம் தரமுடியாத இந்த அரசை கண்டித்தும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும்,” என தினகரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக மக்க ளின் உணர்வுகள் வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த உண்ணாவிரத அறப் போரில் அனைவரும் திரளாக கூடி மத்திய அரசிற்கு நமது உணர்வை வெளிப்படுத்த வேண் டும் எனக் கேட்டுக்கொண்டுள் ளார். இதற்கிடையே தினகரன் புதுக்கட்சி துவங்க சசிகலா ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அமமுக என்ற பெயரை சசிகலா தான் தேர்வு செய்ததாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.