You are here

நல்லாசிரியர் விருது 2018க்கு இன்று முதல் பரிந்துரைக்கலாம்

இவ்வாண்டின் நல்லாசிரியர் விரு துக்கு தகுதியுள்ள தமிழ் ஆசிரியர்களைப் பரிந்துரைக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொது மக்கள் ஆகியோர் வரவேற்கப்படு கின்றனர். இந்த வருடாந்திர விரு துக்கான பரிந்துரைப்புகள் இன்று தொடங்கி மே 18ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழா சிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியன சேர்ந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி/தொடக்கக் கல்லூரி பிரிவுகளில் மொத்தம் ஆறு விருதுகள் வழங்கப்படும். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, மத் திய கல்வி நிலையம் (Centralised Institute), சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகள் (Specialised Schools) ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ் விருதுக்கு பரிந்துரைக்கலாம். நல்லாசிரியர் விருதுக்கு தகுதி பெறுவோர் தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற் பிப்பவராக விளங்க வேண்டும். புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவரா கத் திகழ வேண்டும். மாணவர் களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களிடத்தில் விரும் பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர், சக ஆசிரியர்கள், முன்னாள் மாண வர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகி யோர் ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரைத்து முன் மொழியும் படிவங்களை அனுப்பி வைக்கலாம். பரிந்துரைப்போர் தங்கள் தெரிவுக்கான காரணங்களை படிவத்தில் விளக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் ஆசிரியர், விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட் டால் அவருக்கு விருதும் ரொக்க மும் வழங்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் விருது பெற்ற ஆசிரியர்கள் இவ் வாண்டு விருதுக்குக் கருதப்பட மாட்டார்கள். விருதுக்குப் பரிந் துரைக்கப்படும் ஆசிரியர்கள் விருது வழங்கப்பெறும் காலத்தில் பணியில் இருக்க வேண்டும். முழுமையாக நிறைவுசெய்யப் படாத படிவங்களோ காலம் தாழ்த் திச் சமர்ப்பிக்கப்படும் படிவங் களோ விருது பரிந்துரைப்பிற்குக் கருத்தில் கொள்ளப்படமாட்டா. விருது பெறும் ஆசிரியர்களுக்கு $2000 ரொக்கப் பரிசும் விருதும் வழங்கப்படும். அவர்களின் நேர் காணலும் கற்பித்தல் அனுபவமும் தமிழ் முரசு செய்தித்தாளிலும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் சமூக ஊடகத் தளங்களி லும் வெளியிடப்படும்.

ஆசிரியர்களை பரிந்துரைக்கும் படிவங்களை அனைத்து சிங்கப் பூர் பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ள லாம் அல்லது www.tllpc.sg அல் லது www.tamilmurasu.com.sg ஆகிய இணையத் தளங்களிலி ருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பரிந்துரைகளை இணையம் வழியும் சமர்ப்பிக்கலாம். இணைய முகவரிகள்: http://www.tinyurl. com/MITT-Tamil மற்றும் http:// www.tinyurl.com/MITT-English மேல்விவரங்களுக்கு MOE_ TLLPC_Secretariat@moe.gov.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

2002ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த விருதை இதுவரை 180 தமிழ் ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.