You are here

பங்ளாதேஷை கதறவிட்ட கார்த்திக்

  • படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இந்தியா விளையாடிய முதல் அனைத்துலக டி20 கிரிக் கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நிகழ்த்திய சாதனை கிரிக்கெட் வரலாற்றில் அவரது பெயரை நீங்கா இடம் பிடிக்கச் செய்துள்ளது. இந்திய அணி 12 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தால் என்ற நிலையில் களம்புகுந்தார் கார்த்திக்.

முகத்தில் சிறிதும் சலனமோ, பதற்றமோ இல்லை. பங்ளாதேஷ் வீரர் ரூபெல் ஹுசைன் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 22 ஓட்டங்களை விளாசினார் கார்த்திக். அடுத்து, சௌம்ய சர்க்கார் வீசிய கடைசி ஓவரில் 12 ஓட் டங்களை எடுக்கவேண்டும். முதல் பந்தை வீணாக்கினார் இன்னொரு தமிழக வீரரான விஜய் சங்கர். அடுத்த இரு பந்துகளில் ஆளுக்கு ஓர் ஓட்டத்தை எடுக்க, நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் சங்கர். இரண்டு பந்துகளில் ஐந்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலை யில், சிக்சர் அடிக்க முயன்று பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் சங்கர். ஆயினும், பந்தடிக்கும் முனையை கார்த்திக் சென்றடைந்தது இந்திய அணிக்குச் சாதகமாகிப் போனது.

நெருக்கடியான நிலையிலும் பதற்றப்படாமல் அதிரடியாகப் பந்தடித்து இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, ஆட்ட நாயகன் விருது வென்ற தினேஷ் கார்த்திக்கை (வலது) பாராட்டும் சக தமிழக வீரர் வா‌ஷிங்டன் சுந்தர். படம்: ஏஎஃப்பி