You are here

கல்வி அமைச்சு நடத்தும் பாலர் பள்ளிகள் மீது ஆர்வம் அதிகரிப்பு

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகமான பெற்றோர் இப்போது கல்வி அமைச்சு நடத்தும் பாலர் பள்ளிகளை நாடுகின்றனர். கல்வி அமைச்சும் அதிகரித்துவரும் தேவையை நிறைவேற்ற புதிய கிளைகளை அமைத்து வருகிறது. அடுத்த ஆண்டு பாலர் வகுப் புக்கான பதிவு இம்மாதத் தொடக் கத்தில் முடிவடைந்தபோது, 24 நிலையங்களிலிருந்த பாலர் வகுப்பு ஒன்றுக்கான 2,700 இடங்களுக்கு 2,000க்கு மேலானோர் விண் ணப்பம் செய்திருந்ததாக அமைச் சின் பேச்சாளர் தெரிவித்தார். சென்ற 2015ஆம் ஆண்டில் 10 நிலையங்களுக்குக் கிடைத்த 650 விண்ணப்பங்களைவிட இது வெகு அதிகம்.

பள்ளிகளின் பாடத்திட்டம், குறைவான கட்டணம், அதே இடத் தில் அமைந்திருந்த தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கு முன்னுரிமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நாடெங்கிலும் 50 பாலர் பள்ளிகளைக் கல்வி அமைச்சு நடத்தவிருக்கிறது.