You are here

சீன அதிபர் ஸி ஜின்பிங்: சீனாவை பிளவுபடுத்தும் முயற்சி தோல்வியுறும்

  • சீன அதிபர் ஸி ஜின்பிங். படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவை பிளவுபடுத்த மேற்கொள்ளும் எந்த முயற்சியும் தோல்வி அடையும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் எச்சரித் துள்ளார். மீண்டும் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸி ஜின்பிங், நாடாளுமன்றக் கூட்டத் தின் இறுதி நாளான நேற்று உரையாற்றியபோது இந்த எச்சரிக்கையை விடுத்தார். மக்கள் மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றிய திரு ஸி ஜின்பிங், சீனாவின் மிகப்பெரிய இலக்கு பற்றி எடுத்துரைத்தார்.

உலகளாவிய சக்திமிகுந்த நாடாக சீனா வளர்ச்சி அடைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில் அவரது உரை அமைந் திருந்ததாகக் கூறப்பட்டது. “மொத்த ஒற்றுமையைப் பெறுவதே சீன மக்களின் கூட்டு நம்பிக்கை,” என்று திரு ஸி குறிப்பிட்டார். சீனாவிலிருந்து பிரிந்து செல்ல தைவான் முயற்சி செய்தால் கடும் தண்டனையை அந்நாடு எதிர் நோக்கும் என்றும் அவர் எச்சரித் தார். தைவானில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுதந்திர ஜனநாயக முன்னணிக் கட்சியைச் சேர்ந்த பெண்மணி சாய் இங் வென் வெற்றி பெற்றது முதல் தைவான் மீது சீனா குறை கூறி வருகிறது.

மக்கள் மாநாட்டு மண்டபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உரையாற்றுகிறார். படம்: ஏஎஃப்பி