You are here

அறிவியல் நிலையத்தில் திகிலூட்டும் கண்காட்சி

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் திகிலை ஏற்படுத்தக்கூடிய புதிய கண்காட்சி நாளை தொடங்குகிறது. போபியா2 என்றழைக்கப்படும் ‘த சைன்ஸ் ஆஃப் ஃபியர்’ பயம் தொடர்பான வரலாற்று, கலாசார முக்கியத்துவத்தை விளக்கும். மனவியல், உடலியல் சம்பந்தப்பட்ட உணர்வான பயம் நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தக் கண்காட்சியில் அறிந்துகொள்ளலாம்.

சிலவற்றுக்குப் பயப்படலாம் என்றபோதிலும் மற்ற வற்றை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என் னும் புரிந்துணைர்வை சிங்கப்பூரர்களிடம் ஏற்படுத்த விரும்பியதால் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாகி லிம் டிட் மெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்