You are here

இந்தியப் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பலத்த எதிர்ப்பு

சென்னையை அடுத்த திரு விடந்தையில் ராணுவத் தள வாடக் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக நேற்று காலை சென்னை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வரவேற் றனர்.

ஆனால் சென்னையில் பிற இடங்களில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண் டித்து தமிழகக் கட்சிகளும் பல் வேறு தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து அவற்றின் கடு மையான எதிர்ப்பை வெளிப் படுத்தும் வகையில் போராட்டத் தில் இறங்கின. பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளும் அமைப்பு களும் ஏற்கெனவே அறிவித் திருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக விமான நிலையத்தைச் சுற்றி போலிசார் குவிக்கப் பட்டனர். பாதுகாப்பு வளையத் தையும் மீறி போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகை யிட்டனர்.

தமிழ்த் திரைப்பட இயக்கு நர்கள் பாரதிராஜா, அமீர், கௌதமன், வெற்றிமாறன், ராம் ஆகியோர் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் ‘மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டு முற்று கைப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலிசார் கைது செய்தனர். விமான நிலையத் துக்கு வெளியே உள்ள மைதா னத்தில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சாலை வழி யாகப் பிரதமர் மோடி திருவிடந் தைக்குப் போவதாக முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் செல்ல இருந்த பாதை நெடுகிலும் கறுப்பாடை அணிந்து கறுப்புக் கொடிகளும் கறுப்பு பலூன்களும் ஏந்திக் கொண்டு போராட்டக்காரர்கள் களமிறங்கியதால் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருவிடந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை எங்கும் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது. அதுமட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ‘கோ பேக் மோடி’ (திரும்பிப் போ மோடி) என்ற ‘ஹேஷ்டேக்’ உலக அளவில் ‘டிரெண்டிங்’கில் நேற்று முதல் இடத்தைப் பிடித்தது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகக் கடலெனத் திரண்ட தமிழக மக்கள். படம்: சதீஷ்