You are here

இன்றும் நாளையும் நடக்கவுள்ள நிகழ்வுகள் 

மின்னியல் தமிழ்-புத்தாக்க அணுகுமுறை
நாள்: இன்று பிற்பகல் 2-5 மணி
இடம்: பிக்சல் ஸ்டூடியோ.
பிக்ஸிபிட் நிறுவன ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தமிழ் பயன்பாடு குறித்து தெரிந்துகொள்ளலாம். 

உலகம் உன்னுடையது
நாள்: இன்று மாலை 6- இரவு 8 மணி
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம். 
தொடக்கநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக் கான பேச்சுப் போட்டியுடன் மொழி, பாரம்பரியம், கலாசாரத்தை மேம்படுத்தும் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய உரைகளும் இடம்பெறும். மாணவர்களுக்கும் அழைக்கப்படும் பேச்சாளருக்கும் இடையே கலந்துரையாடலும் இடம்பெறும். 

தமிழும் இசையும்
நாள்: இன்று இரவு 7-10, இடம்: கேம்பல் லேன். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடை மைச் சங்கம் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி கேம்பல் லேன் பகுதியில் நடைபெறுகிறது. 

வாங்க தமிழில் பேசலாம்
நாள்: இன்று பகல் 1-5 மணி
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம். 
சிங்கைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் இளையர் தமிழ் மொழியைச் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதை ஊக்கப்படுத்தும் பேச்சுப் போட்டி. 

‘சொல், சொல்லாத சொல்’ 
நாள்: இன்று காலை 9 மணி 
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம். ‘சொல்வளக் கையேடு’ நூலை அடிப்படையாகக் கொண்டு இளமைத்தமிழ்.காம் நடத்திய ‘சொல், சொல்லாத சொல்’ புதிர்ப்போட்டியின் தொடக்கச் சுற்றில் வெற்றிபெற்ற மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி, என்யுஎஸ்  கணித, அறிவியல் உயர்நிலைப்பள்ளி, தெமாசெக் தொடக்கக் கல்லூரி, உட்லண்ட்ஸ் உயர் நிலைப் பள்ளி ஆகியவை பங்கேற்கும் நிறைவுச்சுற்று. 

இலக்கியச் சங்கமம்
நாள்:  இன்று மாலை 6 மணி 
இடம்: சிராங்கூன் சமூக மன்றம்.
இந்த பல்சுவை நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல், ஆடல், கும்மியாட்டம், சங்க இலக்கியப் பாடல்களு டன் உரையும் பரிசளிப்பும் விழாவில் இடம்பெறும். திருச்சியில் இருந்து வருகை தந்துள்ள முனைவர் அமிர்தகடேஸ்வரர் ‘தமிழ் இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றுவார். 

இளவேனில்
நாள்: நாளை காலை 9-பகல் 12 மணி
இடம்: The POD, தேசிய நூலக வாரியக் கட்டடம்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிவழி  இளையர்கள் தமிழ்மொழி, கலாசாரம், பாரம்பரியம் சார்ந்த பல்வேறு தலைப்பு களில் தங்களது எண்ணங்களை முன்வைப்பார்கள். மேலும் பங்கேற்பாளர்கள் தொழில்நுட்பம் மூலமாகப் பாரம்பரிய விளையாட்டுகளையும் விளையாடலாம். 

இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்
நாள்:  நாளை மாலை 6-இரவு 9 மணி
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்.

இந்திய முஸ்லிம் பேரவையின் இந்நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ், அருணா கந்தசாமி ஆகியோர் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசுவார்கள்.