You are here

மாணவிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

  • PHOTO: TWITTER

ஒரு மாணவியைக் கழிவறை ‘பிரஷ்ஷை’க் கொண்டு தாக்கிய மாணவிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக அஸ்ஸம்ப்சன்ஸ் பாத்வே பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தப் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் சேர்ந்து கொண்டு கழிவறை ‘பிரஷ்ஷால்’ மாணவி ஒருவரைத் தாக்கியதைக் காட்டும் 29 வினாடி ஓடும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. அந்தக் காணொளி பற்றி திருவாட்டி நோரா‌ஷிகின் ரஸ்லி, 29, என்பவர் போலிசில் புகார் செய்தார். இது பற்றி கருத்துத் தெரிவித்த அந்தப் பள்ளி முதல்வர், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, குற்றம் செய்ததாகக் கூறப்படும் மாணவி களில் ஒருவர் ஃபேஸ்புக்கில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.