You are here

கின்னஸ் புகழ் ‘ரிதம் மசாலா’

இந்திய கலாசார திருவிழாவின் ஓர் அங்கமாக, இந்தியர் மரபு டைமை நிலையத்திற்கு வெளியே இன்று காத்திருக்கிறது அதிர் வூட்டும் அசத்தலான ஒரு கலைப் படைப்பு. புகழ்பெற்ற ‘டிரம்ஸ்’ தாள வாத்தியக் குழுவான ‘ரிதம் மசாலா’, இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை தாள வாத்திய இசைவிருந்து படைக்க உள்ளது. பாரம்பரிய இந்திய தாள வாத்தியக் கருவிகளான தபேலா, தவில் போன்றவற்றுடன் மேற் கத்திய, மத்திய கிழக்கு ‘டிரம்ஸ்’ கருவிகளை ஒருசேர வாசிக்க உள்ளனர் ‘ரிதம் மசாலா’ குழுவி னர். இக்குழுவைத் தோற்றுவித்த வரான 48 வயது திரு பாஸ்கரன் ஸ்ரீகரம், 2001ஆம் ஆண்டு முதல் தமது சக கலைஞர்களுடன் ‘டிரம்ஸ்’ வாசித்து வருகிறார். இவரது குழுவினர் இரு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக் காரர்கள்.

கடந்த 2001ஆம் ஆண்டிலும் 2004ஆம் ஆண்டிலும் முறையே 28 மணி நேரம், 50 மணி நேரம் இடைவிடாது டிரம்ஸ் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினர். அந்தச் சாதனையை மேற்கொண்ட தோடு உள்ளூரிலும் வெளிநாடு களிலும் ஏராளமான ரசிகர்களைப் பரவசப்படுத்திய இசைக் கச்சேரி களை இவர்கள் படைத்துள்ளனர். அவற்றில் ஒன்று, இங்குள்ள பள்ளி ஒன்றில் செவிப்புலன் குறை பாடு உள்ள மாணவர்களுக்கு டிரம்ஸ் வாசிக்கக் கற்றுத் தந்தது. மேலும், எளிதில் பாதிப்புக்குள்ளா கும் இளையர்கள் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க டிரம்ஸ் வாத்தியக் கருவிகளை அவர்களுக்கு இலவசமாக வாசிக்க கற்றுத் தருகிறது ‘ரிதம் மசாலா’ குழு.

டிரம்ஸ் தாள வாத்தியக் கருவி கள் வாசிப்பதை “இதயத் துடிப்பு” என வர்ணித்த திரு பாஸ்கரன், மனவுளைச்சலைக் கட்டுப்படுத்த அது ஒரு தளமாக விளங்குவதாக சொன்னார். திரு பாஸ்கரனின் குழுவினர் 22க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள். பாதுகாப்பு, தளவாடம் என பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றும் இவர்களை, இசை மீதான ஆர்வம் ஒன்றிணைத்து உள்ளது. “டிரம்ஸ் வாசிப்பது ஒரு சிறந்த உடற்பயிற்சியும் ஆகும்,” என்ற திரு பாஸ்கரன், இன்றைய கலைப் படைப்பின் மூலம் அதிகமானோர் டிரம்ஸ் வாசிக்க ஊக்குவிக்கப் படுவர் என நம்புவதாகக் கூறினார். செய்தி: முஹம்மது ஃபைரோஸ்

‘ரிதம் மசாலா’ குழுவினர் (இடமிருந்து) பாஸ்கரன் ஸ்ரீகரம், ரகுநாதன் கோபால், எஸ்.ராஜகுமரன், பென்சன் மைக்கல், ஜெனார்கி ராமன். இவர்களது அசத்தலான ‘டிரம்ஸ்’ படைப்பு இன்று காலை இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே இடம்பெறும். படம்: ரிதம் மசாலா