You are here

அதிபர் டிரம்ப்: சிரியா மீது தாக்குதல் தொடரும்

“ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்படுவதை சிரியா நிறுத்தும் வரை அமெரிக்காவின் தாக்குதல் தொடரும்,” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை இலக்காகக் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். தக்க பாடம் கற்பிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் நேற்று அதிகாலை சிரியா மீது ஆகாயத் தாக்குதலை நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மீது விழுந்த வெடிகுண்டுகளால் அந் நகரமே கரும்புகையில் மூழ்கியது. சிரியா அரசாங்கம் நடத்திய தாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கொல்லப் பட்டதால் சிரியாவைத் தண்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். “ரசாயன ஆயுதங்களை இனி யாரும் உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என் பதை உறுதி செய்வதே இன்றைய தாக்குதலின் நோக்கம்,” என்று வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். திரு ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா, ஈரானையும் அவர் சாடினார்.

டமாஸ்கஸ் நகரைக் கடந்து செல்லும் ஏவுகணை. படம்: ராய்ட்டர்ஸ்