You are here

எண்ணெய்க் குழாய் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவாரூர்: கூடூர் பகுதியில் கச்சா எண்ணெய் சேகரிப்பு மையத்துக்காக நடைபெறும் குழாய் பதிக்கும் பணியை எதிர்த்து திருவாரூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது எண்ணெய்க் குழாய்களைத் தூக்கி எறிந்ததுடன், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதையடுத்து குழாய் பதிக்கும் பணிக்காக வந்திருந்த ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் இருந்து வெள்ளக்குடி கச்சா எண்ணெய் சேகரிப்பு மையம் வரை புதிதாக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.