You are here

தங்கம் வென்றார் பத்ரா

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் மேசைப்பந்து ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ராவிடம் சிங்கப்பூரின் யூ மெங்யு நேற்று தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் யூ மெங்கயு வெள்ளிப்பதக்கம் பெற் றார். இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமை 22 வயது பத்ராவைச் சேரும். 11-=7, 11=6, 11=2, 11=7 எனும் நேர்செட்டுகளில் யூ மெங்யுவைத் திணறடித்து தங்கத்தைத் தட்டிச் சென்றார் பத்ரா.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்திய பத்ராவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மெங்யு திண்டாடினார். மின்னல் வேகத் தாக்குதல் களை நடத்திய பத்ரா, பந்தை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டார். தமக்கு எதிராகக் களமிறங்கும் வீராங்கனையைக் குழப்பும் அவரது ‘ஃபிலிப் பேட்’ அணுகுமுறையும் பத்ராவுக்குப் பெரிதும் கை கொடுத்தது. பந்து அடுத்து எந்த திசை நோக்கி அனுப்பப்படும் என்பதை எதிர்தரப்பு வீராங்கனை கணிக்க முடியாமல் இருக்க பத்ரா இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார். இது அவரது பலங்களில் ஒன்று. நேற்று பிற்பகல் நடைபெற்ற அரையிறுதியில் சிங்கப்பூரின் மற்றொரு வீராங்கனையான ஃபெங் தியேன்வையையும் பத்ரா வீழ்த்தியிருந்தார். ஃபெங் தியேன் வை வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

சிங்கப்பூரின் யூ மெங்யுவைத் திக்குமுக்காட வைத்த இந்தியாவின் மணிக்கா பத்ரா. படம்: ராய்ட்டர்ஸ்