You are here

கைரிக்கு நான்காண்டு தடை

ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரம் குறித்து சிங்கப்பூரின் உடற்குறையுள்ள விளையாட்டு வீரர் முகம்மது கைரி இஷாக்குக்கு (படம்) நான்கு ஆண்டு தடை விதிக்கப் பட்டுள்ளது. 28 வயது கைரியின் உடலில் ‘மீதேன்டியேனோன்’ எனும் ஒருவகை ‘ஸ்டராய்டு’ இருந்தது ஊக்கமருந்துச் சோதனையில் தெரிய வந்தது. ஊக்கமருந்து சோதனை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. சோதனைக்குப் பிறகு அவருக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமையன்று சிங்கப்பூர் ஊக்கமருந்து எதிர்ப்பு அலுவலகத்தில் மூன்று நடுவர் களைக் கொண்ட குழுவுக்கு முன் நிறுத்தப்பட்டார் கைரி. கைரி தொடர்பான விசா ரணை அங்கு நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்குத் தடை விதிக்கப் பட்டது. “கைரிக்கு எதிராக இம்மாதம் 6ஆம் தேதியன்று தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு எதிராக நான்கு ஆண்டு தடையை தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்கு முறை குழு விதித்துள்ளது. “இந்தத் தடை இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்கு வதாக எடுத்துக்கொள்ளப்படும்,” என்று ஊக்கமருந்து எதிர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. தமது உடலில் ஊக்கமருந்து இருப்பது குறித்து தெரிய வந்த தும் தாம் ஆச்சரியமும் குழப் பமும் அடைந்ததாக கைரி கூறினார்.