You are here

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  •  படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெடி குண்டு வைக்கப்போவதாக மிரட் டல் விடுத்த 46 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அடையாளத்தை மறைத்து தொடர்புகொண்டு அச்சுறுத்திய குற்றம் ஆல்பர்ட் பாங் சு கான் மீது சுமத்தப்பட்டுள்ளது. உள்ளே வெடிகுண்டு உள்ளது என்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதி நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அவர் கடித உரையை அனுப்பியுள்ளார். பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகளால் அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் அரசாங்க கட்டடங்கள், விடுதிகள், கடைகள் என பல்வேறு இடங்க ளில் இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாக போலிசாருக்கு புகார்கள் வந்து உள்ளன. நேற்று முன்தினம் போலிசார் வெளியிட்ட அறிக்கை யில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக் கும் குறைந்தது ஐந்து கடிதங்களை பாங் அனுப்பியிருக்கக்கூடும் என்று போலிஸ் விசாரணையில் அறியப்படுகிறது.

ஆனால் அவருக்கு வெடி குண்டு தாக்குதல் நடத்தும் எண்ணமோ அதற்கு தேவையான பொருட்களோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு மிரட்டல்களை போலிசார் கடுமையாக கண் காணிப்பர் என்றும் பொதுமக்க ளுக்கு பீதியை ஏற்படுத்தும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர். மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டுள்ள பாங், இம்மாதம் 26ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். அவர் மீதான குற்றம் நிரூபிக் கப்பட்டால் அவருக்கு அதிகபட்ச மாக ஒன்பது ஆண்டுகள் சிறையோ அபராதமோ இரண்டு மோ விதிக்கப்படலாம்.

உள்ளே வெடிகுண்டு உள்ளது என்று எழுதிய கடிதத்தை ஆல்பர்ட் பாங் சு கான் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனுப்பியுள்ளார். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை