You are here

சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் வீட்டில் திருடிய பணிப்பெண்

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ முன் லியோங் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த போது $50,000 மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக பார்த்தி லியானி, 44, என்ற இந்தோனீசியப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2016 அக்டோபர் 28ஆம் தேதி பார்த்தி இந்தத் திருட்டுச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே நாளில் அவர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. இரு நாட்களுக்குப் பின்னரே களவுபோனதை அறிந்தார் திரு லியூ. அதே ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூர் திரும்பிய பார்த்தியை போலிஸ் கைது செய்தது.