You are here

சிறுமியுடன் உறவு: ஆடவருக்கு 13 ஆண்டு சிறை, 12 பிரம்படி

இணையம் வழியாக 12 வயது சிறுமியுடன் பழகி, அதன்பின் நேரில் சந்தித்த முதல்முறையே அவருடன் உடலுறவு கொண்டு, பால்வினை நோயைப் பரப்பிய ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. யூஜின் டெங் ஜியா ரென், 21, என்ற அந்த இளையர் தன் மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவர் மீதான அதேபோன்ற வேறு எட்டுக் குற்றச் சாட்டுகளும் தண்டனை விதிக்கு முன் கருத்தில் கொள்ளப்பட்டன.

2015ஆம் ஆண்டில் தேசிய சேவையாற்றியபோது கைபேசிச் செயலி ஒன்றின்மூலம் அந்தச் சிறுமியுடன் டெங்குக்கு அறிமுகம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. பின்னர் ஃபேஸ்புக் வழியாக நட்புறவாடிய அவ்விருவரும் தங்க ளது தொடர்பு எண்களைப் பரி மாறி, வாட்ஸ்அப் வழியாக உரை யாடத் தொடங்கினர். அப்போது, தான் தொடக்கப் பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருப்பதாக டெங்கிடம் அச் சிறுமி கூறியுள்ளார். நாட்கள் செல்லச் செல்ல அவர் கள் உரையாடுவதும் அதிகமானது.

அச்சிறுமியின் நிர்வாணப் படத்தை அனுப்பும்படி பலமுறை டெங் கேட் டுள்ளார். அதன்பின் டெங்கின் வீட்டிற்கு அச்சிறுமி இரு முறை சென்றுள்ளார். அவ்வேளைகளில் டெங் அச்சிறுமியுடன் உறவு கொண்டதாகக் கூறப்பட்டது. தம் மகளின் நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகமடைந்த அச்சிறுமி யின் தாயார், அவர் எங்கு சென் றார் என்று விசாரித்தபோது டெங் கின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. டெங்கின் தொடர்பு எண்ணைத் தம் மகளிடம் பெற்ற அந்தத் தாயார், டெங்கைத் தொடர்பு கொண்டு தன் மகளை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, கையைப் பிடித்து, முத்த மிட்டதாக மட்டும் டெங் பதிலளித் துள்ளார்.