You are here

இந்திராணி ராஜா முழு அமைச்சராகிறார்; புதிய அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்கள்

அமைச்சரவை மாற்றங்கள் மே மாதம் முதல் தேதி நடப்புக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் மூன்று பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். இதுவே இதுநாள் வரை இல்லாத ஆகப் பெரிய எண் ணிக்கையாக இருக்கும். சட்ட, நிதி மூத்த துணை அமைச்சரான 55 வயது குமாரி இந்திராணி ராஜா, பிரதமர் அலுவ லகத்தில் முழு அமைச்சராகப் பொறுப்பேற்பார் என பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, மனிதவள அமைச்சராக நியமிக்கப் படும் திருவாட்டி ஜோசஃபின் டியோ ஆகியோருடன் குமாரி இந்திராணியும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்.

நான்காம் தலைமுறை தலை மைத்துவ அணியின் முக்கிய அங்கத்தினரான குமாரி இந்தி ராணி, இரண்டாம் கல்வி அமைச் சராகவும் திரு லாரன்ஸ் வோங்கு டன் இரண்டாம் நிதி அமைச்சரா கவும் பொறுப்பேற்பார். கல்வி அமைச்சு முன்போல் மறுபடியும் ஒரே அமைச்சரின்கீழ் இடம்பெறும். திரு ஓங் யி காங் கல்வி அமைச்சை வழிநடத்துவார். இடைக்கால ஏற்பாடாக, குமாரி இந்திராணி ஜூன் 30ஆம் தேதி வரை இரண்டாம் சட்ட அமைச்ச ராகவும் பொறுப்பு வகிப்பார். ஜூலை 1 முதல் திரு எட்வின் டோங் சட்ட அமைச்சில் மூத்த துணை அமைச்சராகப் பொறுப்பேற்பார்.

குமாரி இந்திராணி கல்வித் துறைக்குப் புதியவரல்ல. அவர் 2012 முதல் 2015 வரை கல்வி மூத்த துணை அமைச்சராக இருந் தார். பலதுறைத் தொழில்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக்கழகப் பயன்முறை ஆய்வுப் பரிசீலனைக் குழுவையும் அவர் வழிநடத்தினார். தொழில்கல்லூரியிலும் கல்விக் கழகத்திலும் படிப்பை முடிக்கும் மாணவர்களின் வாழ்க்கைத் தொழில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது இக்குழுவின் நோக்கம். குழு செய்த பரிந்துரைகளின் விளைவாக, வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கவும் பொருளியல் தேவைக்கு ஏற்ப கல்வியைச் சீர மைக்கவும் தேசிய ஸ்கில்ஸ் ஃபியூச்சர் இயக்கம் பிற்பாடு தொடங்கப்பட்டது.

பாலர் பள்ளித் துறையின் விரிவாக்கம், மேம்பாடு ஆகியவற்றை யும் குமாரி இந்திராணி கவனித்திருக்கிறார். தாய்மொழிகள், தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு போன்ற விவகாரங்கள் பற்றியும் பொது கலந்துரையாடல்களில் பேசியிருக்கிறார். சட்ட, நிதி மூத்த துணை அமைச்சராக, குடும்ப நீதிமன்றக் குழுவில் அவர் பங்காற்றினார். மணவிலக்கு பெறும் தம்பதிகள் கூடுமானவரை வேதனையின்றி வாழ்க்கையைச் சீரமைக்கவும், பிள் ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் சட்ட சீர்திருத்தங் களை இந்தக் குழு பரிந்துரைத்தது.

சிங்கப்பூரை இவ்வட்டாரத்தின் நடுவர் மையமாக்கும் நோக்கத்து டன் சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்தை அமைக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். நிதி அமைச்சில், தேசிய வரவு செலவுத் திட்டத்தை வகுக்க நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டுடன் செயல்பட்டதோடு வருமானத்தை உயர்த்துவதற்காக வரியை உயர்த்த வேண்டிய காரணத்தைப் பொதுமக்களிடம் எடுத்துரைப்பதி லும் முக்கிய பங்காற்றினார் குமாரி இந்திராணி.