You are here

சூதாட்டப் பிரச்சினை: முளையிலேயே கிள்ளி எறிவோம்

ப. பாலசுப்பிரமணியம்

அன்பான மனைவி, ஆதரவான சகோதரர், நல்ல சம்பளத்துடன் கூடிய நிபுணத்துவ வேலை, பெரிய வீடு என சுமுகமாகச் சென்றுகொண்டிருந்தது திரு செல்வாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கை. 4டி அதிர்ஷ்டச் சீட்டுகளை வாங்கும் பொழுதுபோக்கு சூதாட்டங்களில் ஈடு படும் பழக்கம் 20 வயதில் இவருக்கு தொடங்கியது. $5, $10 போன்ற சிறு தொகைகளில்தான் அவ்வப்போது சீட்டு களை வாங்குவார்.

குடும்பம், உறவினர் போன்ற சுற்றி இருந்தவர்களின் தாக்கத்தில் வந்தது அப்பழக்கம். ஆனால் அது எப்போதுமே கட்டுக்குள் இருந்தது. 2010ல் மரினா பே சேண்ட்ஸிலும் ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவிலும் சூதாட்டக் கூடங்கள் பெரியளவில் திறக் கப்பட, திரு செல்வாவின் வாழ்க்கையிலும் புயல் வீசத் தொடங்கியது. அலுவலக நண்பர்கள் அடிக்கடி அவரை அங்கு அழைத்துச் சென்றனர். அங்கு விளையாடப்படும் பெரும்பாலான ஆட்டங்கள் அவருக்குத் தெரியாது. ‘பார்த்ததோடு சரி’ என்று பலமுறை இருந்துவிட்டார்.

இருந்தாலும் விதியின் பிடி அவரை விடவில்லை. ‘ஒருமுறை விளையாடித்தான் பார்ப்போமே’ என்று ‘பாக்கராட் (baccarat)’ எனும் ஒருவகை சீட்டாட்டத்தை விளை யாட எடுத்த முடிவு எவ்வளவு பெரிய வீபரீதத்திற்கு இட்டுச் செல்லும் என்று கொஞ்சமும் அவர் நினைக்கவில்லை.

மேலும்