You are here

உள்ளூர் படைப்புகளை வாசிக்க மாணவரிடையே ஊக்குவிப்பு

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூர் இலக்கியம் குறித்து மக்களிடம் பரவலான அறிமுகத் தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு உள்ளூர் எழுத் தாளர்களின் நூல்களை வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஒருசில பள்ளிகள் ஏற்கெனவே உள்ளூர் படைப்புகளை மாணவர் களிடம் அறிமுகப்படுத்தி வருகின் றன. நாட்டின் அனைத்து தொடக்க நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக் கும் நான்கு அதிகாரத்துவ மொழி களிலும் வெளிவந்துள்ள நூல் களை வழங்குகிறது தேசிய கலைகள் மன்றம்.

மாணவர்களின் வாசிப்பு விருப் பத்திற்கும் அவர்களின் வாசிப்புத் திறனுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பள்ளியும் பட்டியலிலிருந்து 15 நூல்கள் வரை தேர்வுசெய்யலாம். இது நூலகங்களில் உள்ள நூல் தொகுப்பை மேம்படுத்த உதவுவ தோடு வகுப்புகளில் வாசிப்பதற் கும் பயன்படும்.

மேலும்,,,