You are here

கைத்தொலைபேசி வழி பாஸ்போர்ட் வசதி

சிங்கப்பூரில் வருங்காலத்தில் கைத்தொலைபேசியில் ஒரு செயலியை அழுத்தினால் போதும். உங்களுக்கு புதிய பாஸ் போர்ட் கிடைத்துவிடும் அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சென்ற மாதம் MyICA, என்ற புதிய இணைய வாயிலைத் தொடங்கியது. பாஸ்போர்ட் பெறுவதற்கான இந்த வசதி, அந்த வாயிலின் இலக்காக இருக்கிறது.

பயனீட்டாளர்கள் தங்கள் சிங்பாஸ்-ஐ பயன்படுத்தி பாஸ்போர்ட், அடை யாள அட்டை, முகவரி மாற்றம் பலவற்றையும் அதன் மூலம் செய்து கொள்ளலாம். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தன்னுடைய சேவை களை மிகவும் வசதியான சேவை யாக ஆக்க திட்டமிடுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மின்னிலக்க மாற்றம் இடம்பெறு கிறது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் தெரிவித்தார்.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தன் சேவைகளை இன்னும் வசதியாக்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்