You are here

புதிய எம்ஆர்டி வழித்தடம் 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறப்பு

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஏழாவது எம்ஆர்டி வழித்தடமான ஜூரோங் வட்டாரப் பாதை 2026ஆம் ஆண்டிலிருந்து மூன்று கட்டங்களாகத் திறக்கப் படும் என போக்குவரத்து அமைச் சர் கோ பூன் வான் தெரிவித்து உள்ளார். 24 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த புதிய வழித்தடத்தில் 24 நிலையங்கள் இருக்கும் என்றும் வடக்கு=தெற்கு பாதை, கிழக்கு= மேற்கு பாதை என்னும் இரு வழித்தட ரயில் போக்குவரத்தை அது இணைக்கும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். ஜேஆர்எல் என்றழைக்கப்படும் புதிய வழித்தடம் தொடர்பான விவரங்களை திரு கோ நேற்று அறிவித்தார். ஜூரோங்கிற்கான அரசாங்கத் தின் தொலைநோக்கை நிறைவேற் றுவதை நோக்கியதாக இது அமையும் என்றார் அவர்.

ஜூரோங் லேக் வட்டாரத்தை மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு வெளியே ஆகப்பெரிய வணிக மையமாக உருவாக்கவும் ஜூரோங் புத்தாக்க வட்டார மேம்பாட்டுக்கு உறுதுணை புரியவும் புதிய வழித் தடம் உதவும் என்றும் திரு கோ கூறினார். கோலாலம்பூர்=சிங்கப் பூர் அதிவேக ரயில்தடம் ஜூரோங் கில் அமைவதால் மலேசியா செல் வோருக்கும் ஜூரோங் வட்டாரப் பாதை வழித்தடம் உதவும் எனவும் திரு கோ கூறினார்.

ஜூரோங் வட்டாரப் பாதை வழித்தடத்தை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவிக்கும் நிகழ்ச்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்