You are here

நூல்கள் வெளியீடு

எழுத்தாளர் ஏ.பி.இராமன் எழு திய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ என்ற நூலும் திருமதி சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ‘தமிழ்ச் சமுதாயமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்க மும்’ என்கிற ஆங்கிலப் பதிப்பும் 69, பாலஸ்டியர் சாலையில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கக் கட்ட டத்தின் அரங்கில் நாளை ஞாயிறு காலை 10 மணிக்கு வெளியீடு காண்கின் றன. சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தின் சார்பில் வெளியீடு காணும் இவ்விரு நூல்களையும் சிங்கப் பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுச் சிறப்பிக்கின்றார். இந்தி யர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு.கே. கேசவபாணி தலைமை உரை நிகழ்த்த, முனை வர் சுப. திண் ணப்பன், திரு நா.ஆண்டி யப்பன், திரு மா.அன் பழகன், திரு ஜோதி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொலைக்காட்சித் தயாரிப் பாளர் முகம்மது அலி, சமூகப் பேச்சாளர் த.ராஜசேகரன் (தலைமை நிர் வாகி, இந்து அறக்கட்டளை வாரி யம்) இணைந்து படைக்கின்றனர். திரு ஜி.டி.மணி நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.