You are here

‘எதையும் திணிக்க கூடாது’

தம்மாலும் கலகலப்பான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்கிறார் விஜய் ஆண் டனி. ஆனால் சொல்லி வைத்தாற் போல் உணர்வுப்பூர்வமான வேடங்கள் தான் அமைகிறதாம். கதையை மீறி எதையும் அதிகப் படியாகச் செய்துவிடக் கூடாது என்பதற் காகவே அடக்கி வாசிப்பதாகச் சொல் கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது ‘காளி’. “ஜாலியான பாத்திரங்கள் அமைந்தாலும் நன்றாக நடிப்பேன். ஆனால் அப்படிப்பட்ட வேடங்கள் அரிதாகத் தான் அமையும் போல் இருக்கிறது. “‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா மரணப் படுக்கையில் இருப்பார். அந்தச் சூழலில் நாயகன் ஜாலியாக இருக்க முடியாது. “அடுத்து ‘சைத்தான்’ படத்தில் மனநலம் பாதிக் கப்பட்டவனாக வருவேன். ‘எமன்’ வேறு ஒரு களம். இப்படி ஒவ்வொரு கதை யிலும் எனது கதாபாத்தி ரம் உணர்வுப்பூர்வ மாகவே இருந்திருக் கிறது. “எனக்கு கதை தான் முக்கியம். என் கதாபாத் திரம் முக்கியம். கதையைத் தாண்டி எதுவும் திணிக்கப் பட்டதாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கி றேன்,” என்கிறார் விஜய் ஆண்டனி.