You are here

விவசாயத்தை ஒழித்துவிட்டு விமானம் விடுவதா: சீமான்

  • நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சேலம்: நூறு நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் விவசா யத்தை ஒழித்துவிட்டதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விளை நிலங்களை விற்றுவிடும் நிலை உள்ளதாக சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியபோது அவர் கவலை தெரிவித்தார். “விவசாயிகள் உயிரை மா ய் த் து க் கொ ள் கி றா ர் க ள் எனில், அது நாமெல்லாம் சோறு இன்றிச் சாகப்போகிறோம் என்ப தற்கான எச்சரிக்கை என்பதை உணர வேண்டும்.

“நாம் கேட்டது காவிரியில் இருந்து தண்ணீர். இவர்கள் தருவது விமான நிலையம். இதை யார் தட்டிக் கேட்பது? சேலத்தில் ஏற்கெனவே 170 ஏக்கரில் விமான நிலையம் உள் ளது. “அதில் ஒரே ஒரு விமானம் மட்டுமே வந்து செல்லும் நிலை யில், அந்த விமான நிலையத்தை இப்போது 570 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டிய தன் அவசியம் என்ன?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.