You are here

‘லட்சியம், உத்வேகம் நாட்டின் வெற்றியை நிர்ணயிக்கும்’

  • வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங். படம்: SGOV.SG

சிங்கப்பூரின் எதிர்கால வெற் றியை அதன் லட்சியங்களும் ஊக் கமுமே வரையறுப்பதாக வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். அதிபரின் உரை குறித்த விவா தத்தில் பேசிய திரு சான், குடி மக்கள் அனைவருக்கும் அர்த்த முள்ளதாகவும் ஈடுபடுத்துவதாக வும் உண்மையானதாகவும் இருக் கும் சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்தை சிங்கப்பூரின் தற் போதைய தலைமுறையினரால் ஒன்றுசேர்ந்து எழுத முடியும், எழுதுவார்கள் என்று கூறினார். முன்னோடித் தலைமுறையினர் வெகு குறைவானவற்றுடன் இந்த அளவுக்குச் சாதித்திருக்கும்போது, இது முடியாததல்ல என்றார் அவர்.

“அவர்கள் பங்குக்கு ஏராள மான சவால்களைக் கடந்து, இன் றைய நமது சிங்கப்பூரை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அப் படி இருக்கும்போது, இப்போது இன்னும் அதிகமான வளங்கள் கொண்ட நமது தலைமுறையின ரால் அடுத்த தலைமுறைக்காக மேன்மேலும் சிறந்த சிங்கப்பூரை விட்டுச்செல்ல முடியாமல் போவ தற்கு எந்தவிதக் காரணமும் இல்லை,” என்று திரு சான் குறிப் பிட்டார்.

வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங். படம்: SGOV.SG