You are here

ஹைதராபாத்தை வீழ்த்தி ‘பிளே ஆஃப்’ சுற்றை உறுதி செய்தது சென்னை

புனே: சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற சென்னை அணித்தலைவர் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதரா பாத் முதலில் பந்தடித்தது. ‌ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங் கினார்கள். இருவரும் அபாரமான ஆட் டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை அணி யின் ஓட்ட எண்ணிக்கை 13.3 ஓவரில் 134 ஓட்டங்களாக இருந்தபோது அந்த இணை பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ‘ரன்அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா இரு ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற் றமளித்தார். 3வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி இணைந்தார். டோனி நிதானமாக விளையாட, அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

இதனால் அவர் 90 ஓட்டத்தைத் தாண்டினார். 18வது ஓவரின் 5வது பந்தில் ஓர் ஓட்டம் எடுத்து டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார் ராயுடு. அப்போது ஓட்ட எண்ணிக்கை சமனானது.