You are here

‘நான்காம் தலைமுறைத் தலைவர்கள் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும்’

அதிபர் ஹலிமா யாக்கோப் தம் நாடாளுமன்றக் கூட்டத் தொடக்க உரையில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் எப்படி நம் நாட்டை வழி நடத்திச்செல்லவேண்டும் என்பதைப் பற்றி பல கருத்துகளைக் கூறினார். அவர்கள் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும். மக்களிடையே நல்ல உறவும், நம்பிக்கையும் பெற வேண்டும் என்றும் கூறினார். அவர்கள் அதற்குப் பாடுபடவேண்டும். மக்களிடையே நல்ல உறவை வளர்த்துக்கொண்டுள்ள இரண்டாவது, மூன்றாவது தலைமுறைத் தலைவர்கள் போல் நான்காம் தலைமுறைத் தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம் (படம்) கூறினார்.

உதாரணமாக, முன்னாள் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் அமைச்சராக 16 ஆண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக 22 ஆண்டும் பணியாற்றியுள்ளார். ”நான் சில காலம் ஊடக மேம்பாட்டு ஆணையத்தில் உறுப் பினராக இருந்தபோது, அவருடன் பழக வாய்ப்புக் கிடைத் தது. தொடர்பு, தகவல் அமைச்சில் வேலை செய்யும் நிரந் தரச் செயலாளர் முதல் இன்னும் அமைச்சில் வேலை செய்யும் அனைவருடனும் எளிமையாகவும் பணிவாகவும் பழகினார். நான்காம் தலைமுறைத் தலைவர்கள் டாக்டர் யாக்கூப் போன்றவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டு நாட்டை நன்றாக வழி நடத்தலாம் என்றும் திரு கணேஷ் யோசனை தெரிவித்தார்.