You are here

பூனம்: உணர்வுகளைக் கொல்லும் இயக்குநர்

நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து அண்மைக் காலமாக பரபரப்பான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் தெரிவித்த சில தகவல்களால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்து எந்தவிதத் தயக்கமும் இன்றி பல உண்மைகளைப் போட்டு உடைத்தார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் நடிகை பூனம் கவுரும் தாம் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ளார். தான் குறிப்பிடும் இயக்குநரின் கைவசம் அதிக படங்கள் இல்லை என்றாலும் மற்றவர்களது வாழ்க்கையில் விளையாடி வருவதாக பூனம் சாடியுள்ளார்.

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் இவர். அதையடுத்து ‘பயணம்’, ‘6’, ‘வெடி’, ‘என் வழி தனி வழி’, ‘நாயகி’ உள்ளிட்ட படங்களின் வழி கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். பூனம் கவுருக்கும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் காதல் என்றுகூட கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களால் பரபரப்பு நிலவுகிறது. சந்தை மதிப்பு குறைந்த நடிகைகளுக்கு ஓர் இயக்குநர் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருவதாகவும் அந்த இயக்குநர் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் பூனம் சாடியுள்ளார். அக்குறிப்பிட்ட இயக்குநர் மற்றவர்களது கலை உணர்வுகளைக் கொலை செய்வதாகக் குறிப்பிட்டுள்ள பூனம், அந்த இயக்குநர் செய்யும் வினையே அவரைத் தண்டிக்கும் என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும் திரித்தும் பேசுகிறார் அந்த இயக்குநர்.